Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை, நலஉதவிகள் வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி வழங்கினார்

தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை, நலஉதவிகள் வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி வழங்கினார்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கி சிறப்புரையாற்றி னார்.தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை செயல்அலுவலர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் செ.கனிமொழி, திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, மாநில வாரிய குழு உறுப்பினர் மூக்கையா, விஜய்சங்கர், மாவட்ட தாட்கோ மேலாளர் சுதா, திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img