fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வேதியியல் தினவிழா கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வேதியியல் தினவிழா கொண்டாட்டம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை மற்றும் அறிவியல் மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய வேதியியல் தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார். தேசிய வேதியியல் தினத்தைக் கொண்டாடும் வகையில், வேதியியல் நம் அன்றாட வாழ்க்கையோடு எவ்வாறெல்லாம் இணைந்துள்ளது என்பதை மையமாகக் கொண்டு நிகழ்வுகள் அமைந்திருந்தது. அதன்படி, வேதியியல் துறை மாணவர்கள் ஆய்வக உபகரணங்களைப் பயன்படுத்தி, வேதியியல் வினைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைச் செயல்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து “எங்களைச் சுற்றியுள்ள தனிமங்கள்” எனும் தலைப்பில் அறிவியல் மன்ற மாணவர்களின் மௌன நாடகம் நடத்தப்பட்டது. இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தனிமங்கள் நாம் சாப்பிடும் உணவில், பயன்படுத்தும் கருவிகளில், வாழும் சூழலில் எவ்வாறெல்லாம் நிறைந் திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தினர். முன்னதாக வேதியியல் துறைத்தலைவர் முனை வர் வி.பாலகுமார் வரவேற்றார். வேதியியல் துறைப் பேராசிரியர்கள் சி.நந்த குமார், முனைவர் ஜி.சங்கமி மற்றும் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.வி.நிவேதன், முனைவர் எம்.ஸ்ரீதர், மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் துணை முதல்வர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், பேரா சிரியர் கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img