ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில், பழங்குடியினர் நல நலவாழ்வு மையம் தொடங்கப்பட்டது.
ஈரோட்டில் அமைந்துள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில், சத்தியமங்கலம் சுடர் தொண்டு நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில், குறிப்பாக ஆசனூர் கடம்பூர், பர்கூர் ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்களின் வாழ் வாழ்வாதாரம் மேம்பாடு, கல்வி, சுகாதாரம் ஆகிய தளங்களில் செயலாற்றுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
வேளாளர் மகளிர் கல்லூரியின் செயலாளர் சே.து.சந்திரசேகர், சுடர் அமைப்பின் இயக்கு னர் எஸ்.சி.நடராஜ் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இப்பணிகளை மேற்கொள்ள, கல்லூரி வளாகத்தில் பழங்குடி யினர் நலவாழ்வு மையம் தொடங்கப்பட்டது.
வேளாளர் மகளிர் கல்லூரியின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குனர் தேவராஜ், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ், கல்லூரியின் முதல்வர் பார்வதி, ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் வனிதா, வரலாற்று துறை பேராசிரியர் கவிதா, தமிழ்த்துறை பேராசிரியர் சுமதி மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.



