தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர் தேர்வு.
சி.பி.எஸ்.சி பள்ளிக ளுக்கு இடையேயான ஆறாவது கிளஸ்டர் விளையாட்டுப் போட்டி கள் கரூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 19.07.2025 முதல் 23.07.2025 வரை நடை பெற்றது. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து, 13000ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் பிரணவ் அருண், 19 வயதுக்குட்பட் டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.82 மீ தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
முதல் பரிசு வென்றதன் மூலம் 10.09.2025 முதல் 13.09.2025 வரை வாரணாசியில் நடை பெறவிருக்கும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு தகுதி பெற்று சாதித்துள்ளார்.
மேலும் 14 வயதுக்குட்பட் டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 8ஆம் வகுப்பு மாணவி பவிஷ்யா 1.26 மீ தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவ்வாறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நந்தகுமார், ராஜலட்சுமி ஆகியோர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.



