கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாடுகளுடன் வணிக நிர்வாகத்துறை கருத்தரங்கு மண்டபத்தில் அதன் துறை சங்கமான “ப்ரோலிஃபிகா” 2025 பெருமையுடன் திறந்து வைத்தது.
இந்நிகழ்வு மாணவர்களுக்கான புதுமை,ஒத் துழைப்பு மற்றும் தொழில் முறை மேம்பாடு நிறைந்த ஒரு புதிய கல்வி அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இன்டர்ஃபேஸ் ஆர்கி டெக்சரின் நிறுவனர் மற்றும் கோவை டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்பின் முன்னாள் தலைவருமான வெங்கடலட்சுமிதலைமை விருந்தினராக கலந்து கொண்டு வணிக மற்றும் தொழில்நுட்ப உலகில் வளர்ந்து வரும் வாய்ப்பு களை ஏற்றுக் கொள்ள மாணவர்களை ஊக்குவித் தார். தொடர்ந்து கதிர்கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் கற்பகம் முதன்மை உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிபிஏ (சிஏ) துறைத் தலைவர் முனைவர். சரவணன், “ப்ரோலிஃ பிகா”வின் தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்கள் குறித்து விளக்கினார்.
நிகழ்வை தொடர்ந்து கதிர் நிறுவனங்களின் நிறுவனர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர், துணைத் தலைவர் மிதிலேஷ், இணைச் செயலாளர் விது பிரதிக்ஷா ஆகியோர் வாழ்த் துக்களைத் தெரிவித்தனர்.
“ப்ரோலிஃபிகா” கல்வி கற்றலை நிஜ உலகவணிக நடைமுறைகளுடன் இணைக்கவும், தலை மைத் துவம் மற்றும் டிஜிட்டல் திறன்களுடன் மாணவர் களை மேம்படுத்தவும் ஒரு துடிப்பான தளமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என நிகழ்வில் தெரிவித்தனர்.



