fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் 404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை நகராட்சி அலு வலக வளாகத்தில் சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு எம். எல். ஏ. ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துக் கொண்டு நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்ற ராணிப்பேட்டை மாவட்ட நான்காண்டு சாதனை மலர் கையேட்டினை வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 140 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் ரூ.85.20 லட்சம் மதிப்பீட்டிலான தங்க நாணயம், 18 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 52 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி, 21 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 81 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், தாட்கோ துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரிய அட்டைகள், மகளிர் திட்டத்தின் சார்பில் 18 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம், 10 பயனாளிக ளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என மொத்தமாக 404 பயனாளிகளுக்கு ரூ.2.39 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், தமிழ்ச்செல்வி அசோகன், தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், வடிவேலு, பேரூராட்சி தலைவர்கள் நாகராஜு, சங்கீதா மகேஷ், நகரமன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட சமூக நலன் அலுவலர் பாலசரஸ்வதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், வட்டாட்சியர் ஆனந்தன், ராணிப்பேட்டை சிறுபான்மையினர் நல தலைவர் அப்துல்லா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img