மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஒத்துழைப்புக் கொள்கை 2025-ஐ வெளியிட்டார். இது இந்திய கூட்டுறவு இயக்கத்திற்கு புதிய திசையைக் காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும்.
“சஹகார் சே சம்ரிதி” என்ற மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் முக்கிய அடியாக இந்தக் கொள்கை அமைகிறது. அந்த்யோதயா கொள்கை களை நிலைநாட்டும் அமித் ஷாவின் திட்ட மிடல், பார்வை மற்றும் உழைப்பு, இந்தக் கொள் கையை வலு வாக உருவாக்கியுள்ளது.
2002ல் மறைந்த பிரதமர் வாஜ்பாய் தலை மையில் இந்தியாவின் முதல் கூட்டுறவுக் கொள்கை அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தற்போது, 2025ல் இரண் டாவது கொள்கை மோடி தலைமையிலான அரசு மூலம் நடைமுறைக்கு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் உள்ள முன் னேற்றங்கள், ஒரு காலத் தில் பொருத்தமின்றிநிலைத் திருந்த துறையை, பெருநிறு வனங்களுக்கு இணையாக வளர்த்துள்ளது.
அமித் ஷாவின் தலை மையில், இது வெறும் ஆவணமாக அல்லாமல், சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு நேரடி நன்மை தரும் ஒரு மாற்ற சக்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
2034க்குள் கூட்டுறவுத் துறையின் GDP பங்களிப்பு மூன்று மடங்காக உயர்த்தும் இலக்குடன், 500 மில்லியன் உறுப்பினர்களை இயக்கத்தில் இணைக் கும் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் ஐந்து மாதிரி கூட்டுறவு கிராமங்கள் உருவாக்கப்படும். இவை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பின் மையங் களாக மாறும். இந்த மாதிரி கிராமங்களில், வெள்ளைப் புரட்சியின் இரண்டாவது அலை பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும்.



