fbpx
Homeபிற செய்திகள்குறைதீர்வு கூட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை - கடலூர் ஆட்சியர் அறிவுரை

குறைதீர்வு கூட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை – கடலூர் ஆட்சியர் அறிவுரை

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசின் உத்தர வின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கா கவும், பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற் கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங் குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து 642 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக் களின் கோரிக்கை மனுக் களை சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக் கள் மீது விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரி வித்தார். மேலும் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு தலா ரூ.4,720 வீதம் மொத்தம் 1,08,560 மதிப்பீட்டிலான திரவ வாயு பெட் ரோலிய தேய்ப்புப் பெட்டியினை யும், ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடப்பிரி வில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற ம.கொலக்குடி உயர் பள்ளி மாணவி ஷர்மி, சேமக் கோட்டை மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த திலிப் குமார், விஷாதானி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், புத்தகப்பை, உயர்கல்வி பயில்வதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங் கினார்.

மேலும் ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனா ளிக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.450 மதிப்பீட்டிலான ஊன்று கோல் வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ சேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, தனித்துணை ஆட்சியர் தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img