fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிக்கு மேத்ஒர்க்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரச் சான்றிதழ்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிக்கு மேத்ஒர்க்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரச் சான்றிதழ்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியானது வளாக அளவிலான உரிமத்திற்கான மேத்ஒர்க்ஸ் நற்சான்றிதழ் திட்டத்தின் மூலம் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கல்லூரி அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மேட்லேப் சிமு லின்க் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மேத்ஒர்க்ஸ் தயாரிப்புகளுக்கு வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வரம் பற்றபயன்பாட்டு உரிமத்தை வழங்குகிறது.
கொங்கு பொறியியல் கல்லூரி பல்வேறு படிப்புகளின் பாடத்திட்டத்தில் மேத்ஒர்க்ஸ் தயாரிப்புகளையும் பணிப்பாய்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. மேத்ஒர்க்ஸ் மென்பொருளின் சிறந்த பயன்பாட்டைப் பாராட்டுவதற்காக மேத்ஒர்க்ஸ் இயக்குநர்கள் ஆனந்த் கீதாகோவிந்தன் மற்றும் அருள்மொழிசெல்வன் ஆகியோர் அங்கீகாரச்சான்றிதழை கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.பரமேஸ்வரனிடம் வழங்கினர். மேலும் நடைமுறைப்படிப்புகளில் மேட்லேபை திறம்பட பயன்படுத்துவதற்காக ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – ட்ரிப்பிள் ஈசிஈ மற்றும் கணிதம் ஆகியதுறைகளின் தலைவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img