fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 421 மனுக்களை பெற்ற ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 421 மனுக்களை பெற்ற ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 421 மனுக்களை ஆட்சியர் பெற்றுக் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கான நல வாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் (பொறுப்பு), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, உதவி ஆணையர் கலால் ராஜ்குமார், நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img