இந்திய தொழில் வர்த்தக சபையின் மக ளிர் அமைப்பான பிக்கி புளோ, 2025 – 26-ம் ஆண் டிற்கான 2வது தேசிய நிர்வாகக் குழு கூட்டம் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் கோவை ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கோவை அமைப்பின் தலைவர் டாக்டர் அபர்ணா சுங் தலைமை வகித்தார்.
நிகழ்வில் தேசியத் தலைவர் பூனம் சர்மா, பிரசிடியம் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் சுகுணா ரவிச்சந்திரன் மற்றும் பூனம் பாஃப்னா உள்பட இந்தியா முழுவ திலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக நலப் பணிகள், தலைமைத்திறன் மேம்பாட்டு முயற்சிகள், மற்றும் பெண்கள் திறன் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



