அடிஷியா டெவலப் பர்ஸ் நிறுவனம் சார்பில் கோவை துடியலூர் அருகே பன்னிமடையில் அடிஷியா ஈக்கோ வேலி பன்னிமடை என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நேற்று நடந்த தொடக்க விழாவில் வீட்டுமனை விற்பனையை அடிஷியா நிறுவனரும், மேலாண்மை இயக்குனருமான மணிகண்டன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அங்கு உள்ள அலுவலக கட்டிடம், அடிசியா டெவலப்பர்ஸ் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பன்னிமடையில் அடிஷியா டெவலப்பர்ஸ் சார்பில் எக்கோ வேல்யூ என்ற பெயரில் வீட்டு மனை விற்பனை தொடக்கப்பட்டு உள்ளது.
8 ஏக்கர் பரப்பளவில் 149 மனைகள் உள்ளன. 1½ சென்ட் முதல் 5½ சென்ட் வரை மனைகள் உள்ளன.
திறப்பு விழாவுக்கு முன்பே 50 சதவீதம் விற்பனையாகி உள்ளது. ஈக்கோ வேலி மனைப் பிரிவு என்பது, சுற்றுச்சூழல் சார்ந்த மேம்பாடு மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு ஆகும். இங்கு வீட்டுமனை வாங்கு பவர்களுக்கு சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன், 2 பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈக்கோ வேலி தொடக்க விழாவை முன்னிட்டு முதல் ஒரு வாரத்திற்கு மனைகள் வாங்குவோருக்கு பத்திரபதிவு இலவசமாக செய்து கொடுக்கப்படும். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். கோவையை சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்களும் இங்கு இடம் வாங்க ஆர்வத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



