fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் பேங்க் ஆப் இந்தியா நடத்திய வேளாண்மை சேவை பெருவிரிவாக்கத் திட்ட முகாமில் விவசாயிகளுக்கு ரூ.24.10...

சேலத்தில் பேங்க் ஆப் இந்தியா நடத்திய வேளாண்மை சேவை பெருவிரிவாக்கத் திட்ட முகாமில் விவசாயிகளுக்கு ரூ.24.10 கோடி கடன்- பொது மேலாளர் ஷம்பா பிஸ்வாஸ் வழங்கினார்

பேங்க் ஆப் இந்தியா சார்பில் விவசாயிகளுக்கான கிசான் மேளா மற்றும் வேளாண்மை சேவை பெருவிரிவாக்கத் திட்ட முகாம் சேலத்தில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் ஷம்பா பிஸ்வாஸ் தலைமை தாங்கினார். கோவை மண்டல மேலாளர் ரஞ்சீத் குமார், உதவி மண்டல மேலாளர் ஏ.சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மெகா முகாமில் 35 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5.50 கோடி கடனுதவிக்கான முன்னனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு ரூ.24.10 கோடி கடனுதவிகளும் வழங்கப்பட்டன. இவற்றை பொது மேலாளர் ஷம்பா பிஸ்வாஸ் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த இம்முகாமில் வாடிக்கையாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் என 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா செயல்படுத்தி வரும் பல்வேறு வேளாண்மை தொடர்பான நிதி திட்டங்கள், சுயஉதவிக்குழுவினருக்கான கடன், கேசிசி, கிரிஷி வாகன், பண்ணை தொழில்நுட்பம், கிஷான் தட்கல், கிஷான் ஹார் மற்றும் கால்நடை பராமரிப்பு தொடர்பான திட்டங்கள் குறித்தும் அவசரத் தேவைக்கான நிதியுதவி, வாகன கடன் மற்றும் நேரடி பங்குகள் பற்றியும் வங்கி அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இம்முகாம், புறநகர்ப்புற வளர்ச்சியையும் விவசாயிகளின் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img