fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட அதிகாரிகளுடன் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

நீலகிரி மாவட்ட அதிகாரிகளுடன் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் எஸ்.காந்திராஜன் (வேடச் சந்தூர்) தலைமையில் குழு உறுப்பினர்கள் முன்னி லையில் அரசுத்துறை அலுவலர்களுட னான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளி கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் எஸ்.காந்திராஜன் (வேடச்சந்தூர்) அவர்கள், தலைமையில், குழு உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), இராம.கருமாணிக்கம் (திருவா டணை), மா.சின்னதுரை (கந்தர்வ கோட்டை), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), சேவூர் எஸ்.இராமச் சந்திரன் (ஆரணி), எஸ்.பி.வெங் கடேஸ்வரன் (தருமபுரி) மற்றும் முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன், பா.சுப்பிரமணியம் (கூடுதல் செயலாளர்), சு.பாலகிருஷ்ணன் (துணைச்செயலாளர்), மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் முன்னிலையில் அரசுத்துறை அலுவலர்களு டனான ஆய்வுக் கூட்டம் நேற்று (18ம் தேதி) நடைபெற்றது.
பின்னர் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் எஸ்.காந்திராஜன் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஒவ்வொரு வருடமும் சில முக்கிய துறைகளை தேர்ந்தெடுத்து அந்த துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில், இவ்வாண்டு நீலகிரி மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சிறைசாலைகள் மற்றும் சீர்தி ருத்த பணிகள் (உள் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இயற்கை வளங்கள் துறை, எரிசக்தித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கூட்டுற வுத்துறை, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத் துறை, வனத்துறை உள்ளிட்ட 10 துறைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இன்றைய தினம் ஆய்வுப் பணியினை இக்குழு மேற்கொண்டுள்ளது. மதிப்பீட்டுக்குழு என்பது தமிழ் நாடு சட்டமன்றத்தால் அமைக்கப் பட்ட சட்டமன்றத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர் களை கொண்ட ஒரு குழுவா கும். இக்குழுவின் பணி தமிழ் நாடு அரசின் பட்ஜெட் அறி விப்பின்படி ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்ட பணிகளுக்கான நிதி முறை யாக செலவு செய்யப்பட்டு பணி கள் முடிக்கப்பட்டுள்ளது குறித்து கள ஆய்வு செய்யும் பணியினை மதிப்பீட்டு குழு மேற்கொண்டு வருகிறது, இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம் (உதகை), வெங்கடேஷ்பிரபு (கூடலூர்), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌரி, குன்னூர் சார் ஆட்சியர்சங்கீதா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின்இணைப் பதிவாளர் தயாளன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.பால கிருஷ்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வர் மரு.கீதாஞ்சலி, மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் குப்புராஜ், தேசிய நெடுசாலைத் துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையா ளர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img