பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள், இந்திய ஜனநாயக கட்சியின் இளைய வேந்தர் ரவி பச்சை முத்து பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு – இந்திய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்டம், கவுண்டபாளையம், தொண்டா முத்தூர் தொகுதிகளின் தலைவர்கள் ஏற்பாட்டில் கோவை அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயங்களை வழங்கினர்.
இந்திய ஜனநாயக கட்சி கவுண்டம் பாளையம் தொகுதி தலைவரும், காமராஜர் மெட்ரிகு லேஷன் பள்ளி இயக்குனருமான என்.கே.ஆர்.ராஜா ராமச்சந்திரன், கோவை வடக்கு தொகுதி தலைவர் எஸ்.கே.சந்தான குமார், தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் கே.மணிமாறன் ஆகி யோர் தலைமையில் பல்வேறு பகுதிகளில் நற்பணிகள் முன்னெடுக்கபட்டது.
கவுண்டம்பாளையம் அடுத்த சரவணாநகர் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் அறக்கட்டளை, கோவை வரப்பாளையம், இமயம் முதியோர் இல்லம், வரப்பாளையம் கிராம மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளகிணறு பகுதி பொதுமக்களுக்கும், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள, கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும், குரும்பபாளையம் பகுதி பொது மக்க ளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் கோவை அரசு மருத்து வமனையில் பிறந்த 20க்கும் மேற் பட்ட குழந்தைகளுக்கு சுமார் 10 கிராம் எடையுள்ள, வெள்ளி நாணயங்கள் வழங்கபட்டது. மேலும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் வேந்தர் மற்றும் இளைய வேந்தர் ரவி பச்சைமுத்து ஆகியோரின் பெயரில் கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிவா, வடக்கு மாவட்ட பொருளாளர் நர சிம்மன், வேடபட்டி பேரூராட்சி ராஜன், கவுண்டம் பாளையம் பொருளாளர் வில்சன் தாமஸ், கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் ரகுராம், ஊடக பிரிவு செயலாளர் செந்தில்குமார், மற்றும் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சரவணப்பிரியா, தொண்டாமுத்தூர் செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



