ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பட்ட வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி தலைமை உரையாற்றினார். செயலாளர் என்.கே.கே.பி.நரேன்ராஜா சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் பெ.வானதி, துணை முதல்வர் ப.சுரேஷ் பாபு, கல்லூரியின் இணைச்செயலர்கள் வசந்திசத்யன், பரிமளாராஜா, நிர்வாக அலுவலர் இரா.அருள்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுண்ணுயிரியல் துறைத்தலைவர் எஸ்.கிருத்திகா வரவேற்றார். தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் த.ஜெயந்த் நன்றி கூறினார்.



