fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடீசியாவில் 10 நாட்கள் புத்தக திருவிழா நாளை தொடங்குகிறது

கோவை கொடீசியாவில் 10 நாட்கள் புத்தக திருவிழா நாளை தொடங்குகிறது

கோவை கொடீசியாவில் புத்தக திருவிழா 18-ந் தேதி (நாளை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது


இது குறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன் செயலாளர் யுவராஜ் “கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 “தலைவர் ராஜேஷ் உதவி தலைவர் முத்து குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள் அப்போது அவர்கள் கூறியதாவது:-


கோவை கொடீசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடீசியா இணைந்து 9-வது பதிப்பாக “ புத்தக திருவிழா – 2025” தொடக்க விழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.


வருகிற 27-ந் தேதி முடிய 10 நாட்கள்நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொள்கிறார்.


இந்த புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி. கர்நா டகா ஆந்திரா உ.பி., அசாம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிப்பகத்தினர் பங்கேற்கிறார்கள்.


இந்த கண்காட்சியில் 170க்கும் மேற்பட்ட காட் சியாளர்கள் மற்றும் 320 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது மேலும் தினசரி கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாலையில் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.


கண்காட்சி தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கிறது.
இந்த புத்தக திருவிழாவில் இளம் படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. 20ந் தேதி நடைபெறும் நிகழ்வில் கவிஞர் வைரமுத்து கலந்து கொள்கிறார். 27ந் தேதி மாலையில் நடைபெறும் இறுதி நாள் நிகழ்ச்சியில் வள்ளி கும்மி நடனம் நடக்கிறது.


மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்

படிக்க வேண்டும்

spot_img