கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் “கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு “ சார்பில் கிராப்ட் பஜார் 2025 கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நேற்று (16ம் தேதி) காலை நடைபெற்றது.
வருகிற 22ம் தேதி முடிய 6 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களின் அரங்குகள் இடம் பெற்று உள்ளன.
அதில் கைத்தறிச் சேலைகள், ரெடிமேட் ஆடைகள், பெட்ஷீட், ஓவியங்கள், கலைப் பொருட்கள் மற்றும் காலணிகள், தோல் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.



