fbpx
Homeபிற செய்திகள்4 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த மார்கண்டேயன் எம்எல்ஏ

4 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த மார்கண்டேயன் எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், ரூ.80-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

மேலும் கடந்த கல்வியா ண்டில் அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பாஸ்கரன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மரிய ஜான் பிரிட்டோ, தலைமை ஆசிரியர் சேகர், ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாசாந்தா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ், குதிரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் தங்கச்சாமி, வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த் அந்தமான், இளைஞர் அணி ராஜா, கிளைச் செயலாளர்கள் மாரியப்பன், கனகராஜ், ரூஸ்வெல்டு, லட்சுமணன், பெருமாள் சாமி, ஜெயச்சந்திரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லிங்கராஜ் உட்பட சென்னை வாழ் வேப்பலோடை சங்க நிர்வாகிகள், ஆசிரியர்- ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img