திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே செய்தியாளர் பயணத்தின் போது கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டப்பணிகள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி, தொட்டம்பட்டி லட்சுமி நகர் 3-வது வீதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.22 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி, மாதப்பூரில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணி, மாதப்பூர் ஊராட்சி, ஆர்.வி.நகரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி, மாதப்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும், எலவந்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.99 லட்சம் மதிப்பீட்டில் ஓடை தூர்வாரும் பணி மற்றும் பொங்கலூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே மாதப்பூரில் குடிநீர் தரம் குறித்தும், மாதப்பூர் ஊராட்சி, பெதப்பம்பட்டியில் வேளாண்மைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்கைபூண்டு சாகுபடி செய்யப் பட்டுள்ளதையும், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சணப்பை விதை உற்பத்தி திடல் மற்றும் தென்னை நாற்றாங்காலையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு, வேளாண் அறிவியல் நிலையம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பாகவும், தேனீ வளர்ப்பு குறித்தும், நாட்டுக்கோழி முட்டை குஞ்சு பொறிப்பான் கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தர வடிவேலு, செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) மோகன சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷீலா பூசாலெட்சுமி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சசிகலா, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார், உதவி பொறியாளர்கள் இளங்கோ, ரங்கசாமி மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



