தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை அறவே தடுக்க மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், உணவு பாது காப்புத்துறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை, காவல் துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு கண்காணித்து விற்பனையை தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தர்மபுரி நகராட்சி பகுதிகளில் மாவட்ட உணவு பாது காப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் தலைமையில் நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் தர்மபுரி நகராட்சி நகர் நல அலுவலர் மருத் துவர் லட்சியவர்ணா, நக ராட்சி பணியாளர்கள் இணைந்து தர்மபுரியில் கந்தசாமி வாத்தியார் தெரு, எஸ்வி.ரோடு, வெளிப் பேட்டை தெரு உள்ளிட்ட வீதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில் வெளிப்பேட்டை தெருவில் அங்காளம்மன் கோயில் அருகில் ஒரு சிறு பெட்டிக்கடையில் புகை யிலை பொருட்கள் இருப்ப தற்கான அறிகுறி இருந்தது. தீவிர விசாரணையில் கடையின் அருகில் கடை உரிமை யாளருக்கு சொந்த மான ஒரு சிறிய பூட்டிய வீட்டை திறக்க செய்து ஆய்வு நடத்தியதில் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ்,விமல் பான் மசாலா வி1 டொபோக்கோ உள்ளிட்ட புகையிலை பொருட்கள் நான்கு கிலோ அளவிளானது கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு உடனடியாக ரூ.25,000 அபராதம் விதித்து கடை 15 தினங்கள் இயங்க தடை விதித்தனர். உடனடியாக கடையடைக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் நியமன அலுவலரால் கடை விற்பனையாளருக்கு வழங்கப்பட்டது.



