fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ‘தீக்ஷாரம்பம்’ - மாணவர் சேர்க்கை தொடக்கவிழா

அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ‘தீக்ஷாரம்பம்’ – மாணவர் சேர்க்கை தொடக்கவிழா

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் புதிய மாணவர்களுக்கான “தீக்ஷாரம்பம்“ என்ற மாணவர் சேர்க்கை திட்டத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் வேந்தர், புதியமாணவிகளை வரவேற்று, ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார்.


பெண்கள் கல்விக்கு முன்னோடியான பத்ம பூஷண் டாக்டர் டி.எஸ்.அவிநாசிலிங்கம் அய்யா மற்றும் உலகப்புகழ் பெற்ற உணவியலாளர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜம்மாள் பி.தேவதாஸ் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையையும் பெருமையுடன் நினைவுகூர்ந்த அவர், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கும் விதத்திலும், ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வு டன் வளர வேண்டுமென வலியுறுத்தினார்.


துணை வேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர், அவிநாசிலிங்கம் நிறுவனத்தின் பாரம்பரியமான புகழ் பெற்ற வரலாற்றையும், அதில் நிலைபெற்றுள்ள கல்வி முறைமைகளையும் விளக்கி உரையாற்றினார்.

இந்நிறுவனம் மரபுத் தன்மையையும், அறிவியல் கல்வியையும் இணைத்துத் தழுவும், மகளிர் கல்விக்கு முன்னோடியாக விளங்கும் நிறுவனம் என அவர் தெரிவித்தார். முழுமையான கல்வி அணுகுமுறையை பின்பற்றி, அறிவு வளர்ச்சி மட்டுமல்லாமல், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பையும் வளர்க்கும் வகையில் இக்கல்வி அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


பதிவாளர் டாக்டர் எச்.இந்து இளம் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தி, நிறுவனம் வழங்கும் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் குறித்துப் பேசினார். முன்னதாக மாணவர் மன்றத் தலைவர் சாந்தியா வரவேற்றுப் பேசி னார். இறுதியில் மாணவர் மன்றச் செயலாளர் சுரந்தரநாச்சினி நன்றி தெரி வித்தார்.


நிகழ்வில், தமிழகமெங்கும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img