fbpx
Homeபிற செய்திகள்பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.6.92 கோடி செலவில் வீடுகள்

பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.6.92 கோடி செலவில் வீடுகள்

பவானிசாகர் தொகுதியில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஆய்வு செய்தார்.

பவானிசாகர் சட்டப் பேரவைத் தொகுதிக் குட்பட்ட பவானி சாகர் பேரூராட்சி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி, புங்கார் மற்றும் கொத்த மங்கலம் ஊராட்சிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஆய்வு செய்தார். புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 52.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.

காராட்சிக்கொரை வனக் கிராமத்தில் செயல் படும் வனத் துறை மரக்கன்று உற்பத்தி மையத்தை பார்வையிட்டு மரக்கன்று நடவு, மரக்கன்று விநியோகம் மற்றும் இயற்கை உரம் பயன்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். பவானி சாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.6.92 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img