fbpx
Homeபிற செய்திகள்மாநில தாங்டா சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் குவித்த கோவை மாணவ, மாணவிகள்

மாநில தாங்டா சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் குவித்த கோவை மாணவ, மாணவிகள்

தமிழ்நாடு தாங்டா அசோசியேசன் நடத்தும் 9வது மாநில தாங்டா சாம்பியன்ஷிப் 2024-2025 போட்டி கன்னியா குமரி சிஎஸ்ஐ ஹாலில் ஜூலை 5 மற்றும் 6 தேதிகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி மாணவ, மாணவிகள் 17 பேர் கலந்து கொண்டு 5 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் வென்றனர்.


மினி சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி- நிஷ் வந்த் வெள்ளி, ஏபிசி மெட்ரிக் பள்ளி- ஸ்ரீ தர்ஸன் வெண்கலம், சப் ஜுனியர் பிரிவில் கார்மல் கார்டன் பள்ளி சச்சின் ஆலிவர் தங்கம், பிஎஸ்ஜி பப்ளிக் பள்ளி அக்க்ஷன் தங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி சஞ்ஜித் வெள்ளி, ப்ரக்ரியா இன்டர்நேஷனல் பள்ளி – பிரணீத் ஸ்கந்தா வெள்ளி, கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி- சஷ்வந்த் வெள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி பிர னேஷ் வெண்கலம், ஹிந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி ஹரீஸ் வெள்ளி, பெர்க்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஹாரிக்ளேவர் வெண்கலம், நிர்மலா மாதா மெட்ரிக் பள்ளி ரித்திக் கிஷன் வெண்கலம், ஜுனியர் பெண்கள் பிரிவில் விசிவி சிசு வித்யோதயா மெட்ரிக் பள்ளி நேத்ரா ஸ்ரீ – தங்கம், செயின்ட் ஜோசப் பள்ளி ஜெஸ்லின் வெள்ளி, ஜிடி பள்ளி பவித்ரா வெள்ளி, ஜுனியர் ஆண்கள் பிரிவில் பிஎஸ்ஜி சர்வோஜனா பள்ளி சுதர்சன் தங்கம், கேஜிஎம்எஸ் மேல்நிலை பள்ளி பிரகதீஷ்வரன் தங்கம், ஜிஆர்என் மெட்ரிக் பள்ளி ராகுல் வெண்கலம் ஆகியோர் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பா லயா தலைமை ஆசிரியர் டாக்டர் செல்வக்குமார் இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img