நீலகிரி மாவட்டத்தில் அகில உலக கூட்டுறவு ஆண்டு 2025 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் சனிக்கிழமையான கடந்த 5ம் தேதி அகில உலக கூட்டுறவு தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அகில உலக கூட்டுறவு ஆண்டை கொண்டாடும் விதமாக நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ராவ் பகதூர் ஆரிகவுடர் திருமண மண்டபத்தில் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா.தயாளன் தலைமையில் “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற கருப்பொருளோடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் தொடக்கத்தில் கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு மரக் கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய இணைப்பதிவாளர் இரா.தயாளன், உலகத்திலுள்ள 193 நாடுகளும் அனைத்துலகக் கூட்டுறவு நாளைக் கொண்டாடுகின்றன.
பட்டினி, பசியால் வாடும் ஏழை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மூன்றையும் வழங்கும் உன்னதப்பணியை கூட் டுறவுகள் வழங்கி வருகின்றன. மேலைநாடுகள் கூட்டுறவின் பயனை முழுமையாகப்பயன்படுத்தி முன்னேற்றம் பெற்றுவிட்டன, என்றார்.
“பீடுற்றார் மேற்கில் பிற நாட்டார் என்பதெல்லாம், கூடித்தொழில் செய்யும் கொள் கையினால் தோழர்களே !” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை அவர் நினை வூட்டினார்.
விழாவில் பி. மணியட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 5 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், குருத் துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.1 கோடி” மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.
கூட்டுறவு நிறுவனங்களில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு பதக்கம் மற்றும் சான் றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவ மாண வியர்களுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டி கவிதை போட்டி ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற எப்பநாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள், தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய உதகை கிளை மாணவர்களுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
கூட்டுறவு சார்பதிவாளர் யோகேஸ்வரன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திகேயன் வர வேற்புரை வழங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் ரா.கௌரிசங்கர் திட்ட விளக்க உரையாற்றினார்.
பின்னர் முன்னிலை உரையாற்றிய துணைப்பதிவாளர் சி.அய்யனார் அகில உலக கூட்டுறவு ஆண்டு கொண்டாட்டத்தின் மாதாந்திர நிகழ்வுகளை எடுத்துரைத்தார். துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் குன்னூர் கூட்டுறவு நகர வங்கி சு.குமாரசுந்தரம், துணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மரு. தே. சித்ரா, துணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் திரு தா. முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக கூட்டுறவு சார்பதிவாளர் முத்துராமலிங்கம் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் ஆகிய 300க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.



