அமேசான் மியூசிக் இந்தியா, சென்னையில் தனது பிரைம் டே பிரச்சாரத்தை பேலிஸ்ட் டுடன் கொண்டாடும் பிரத்யேக லிசனிங் பார்ட்டி மற்றும் வைரல் சென்சேஷன் சாய் அப்யங்க்கரின் புத்தம் புதிய பாடலின் அறிமுகத்தையும் கொண்டாடியது.
நகரத்தின் மையத்தில் நடந்த இந்த நிகழ்வு, தனது வெளியிடப்படாத பாடலான ‘விழி வீக்குர’-வை முதன்முறையாக நேரடியாக வெளியிடுவதற் காக, ரசிகர்கள், படைப் பாளிகள் மற்றும் ஊடகங்கள் நிறைந்ந கூட் டத்தின் முன்னிலையில் மேடையில் வந்த சாய்க்கு ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் அதிர்வு, சாயின் தனிச்சிறப்புமிக்க குரலைப் போலவே, நெருக்கமானதாகவும், துள்ளளுடன் இதயத்தை நிரம்பியதாகவும் இருந்தது. இந்த பாடலை ஜூலை 7 முதல் அமேசான் மியூசிக் இந்தியாவின் பேலிஸ்ட் பிளேலிஸ்ட்டில் பிரத்தியே கமாகக் கேட்டு மகிழலாம்.
‘கச்சி சேரா’ என்ற பாடலின் மூலம் இண்டீ இசை ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்த சாய், சமகால மற்றும் வேரூன்றிய மெல்லிசைகளின் தனித்துவமான இணைவுக்கு பெயர் பெற்றவர்.
இந்நிகழ்வை பற்றி சாய் அப்யங்க்கர் கூறுகையில், “அமேசான் மியூசிக் இந்தியாவுடன் பேலிஸ்ட்டின் ஒரு பகுதியாக எனது புதிய பாடலை அறிமுகப்படுத்துவது உண்மையிலேயே ஒரு தனிப்பட்ட தருணமாக இருந்தது. இது வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நான் என் பயணத்தின் ஒரு பகுதியை எனக்கு ஆதரவளித்த மக்களுடன் பகிர்ந்து கொண்டதாக உணர்ந்தேன்.
ஜூலை 7 அன்று வெளியாகுகிற இந்தப் பாடலை, அமேசான் மியூசிக் இந்தியாவில் டியூன் செய்து பேலிஸ்ட்டில் கேட்டு மகிழுங்கள்”, என்றார்.



