மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கோவை காளப்பட்டி நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மாநகராட்சி உறுப்பினரும் விளாங்குறிச்சி பகுதி திமுக பொறுப்பாளருமான விஜயகுமார் குத்துவிளக்கு ஏற்றினார்.
அருகில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242சி. மாவட்டத்தின் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ரகுபதி, மோகன் ரங்கநாதன், வார்டு செயலாளர் வினோத், காளப்பட்டி சின்னத்தம்பி, நவீன், செந்தில்வேல், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன், இன்ஜினியர் குமார், காளப்பட்டி நகர்ப்புற நல்வாழ்வு மைய மருத்துவர் டாக்டர் மனோஜ்,
செவிலியர் V சந்தியா சுகாதார ஆய்வாளர் அபினேஷ், மருத்துவ பணி யாளர் மதன் குமார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



