fbpx
Homeபிற செய்திகள்கோமாரி நோய்த்தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி

கோமாரி நோய்த்தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் 2,98,400 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படுகிறது. அல்லாளபுரம் பகுதியில் நடைபெற்ற முகாமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அல்லாளபுரம் கிராமத்தில் தொடங்கப்பட்ட 7-வது சுற்று முகாமில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்துகொண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இம்மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடந்த 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மாவட்டத்தில் 2,43,708 பசு இனங்கள், 54,692 எருமை இனங்கள் என மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு 100 சதவீதம் முழுமை யாக தடுப்பூசி போடப் படவுள்ளது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கோமாரி நோய் இரட்டைக் குளம்பின கால் நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பு ளங்கள் ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதார மற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப் பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது.

கோமாரி நோயினால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கோமாரி நோய் தடுப்புத் திட்ட த்தின் கீழ் 6 மாதங் களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெரு மக்கள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை, அந்தந்த கிராமங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு கால்நடைகளை அழைத்து சென்று கோமாரி நோய்த் தடுப்பூசியினை போட்டுக் கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இம்முகாமில், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், கால்நடை பராமரிப்பு துறையின் நாமக்கல் மண்டல இணை இயக்குநர் மரு.வீ. பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img