fbpx
Homeபிற செய்திகள்மூலதன சந்தை பயிற்சி தரும் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம்

மூலதன சந்தை பயிற்சி தரும் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம்

கோடக் செக்யூரிட்டீஸ், நாடு முழுவதும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மூலதன சந்தை பற்றிய கல்வியை வழங்கும் இலவச பன்மொழி கற்றல் தளமான கோடக் ஸ்டாக் ஷாலா என்பதை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கோடக் நியோ செயலி வழியாகவும் அணுகக்கூடிய இந்த தளம், இரண்டு வடிவங்களில் கற்றலை வழங்குகிறது.


வீடியோ அடிப்படையிலான கோர்ஸ், அடிப்படை மற்றும் மேம்பட்ட கருத்துகளை உள்ளடக்கிய குறுகிய, சிறிய அத்தியாயங்களை கொண்ட மூன்று கட்டமைக்கப் பட்ட கோர்ஸ், விரைவில் ஆங்கிலத்தில் தொடங்கப்படும்.


200க்கும் மேற்பட்ட, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அத்தியா யங்களாகப் பிரிக்கப்பட்ட ஐந்து விரிவான கோர்ஸ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கின்றன. கூடுதல் பிராந்திய மொழிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆர்வமுள்ள சந்தை பங்கேற்பாளர்களுக்கு நிதி கல்வியறிவு மற்றும் மூலதன சந்தைகள் குறித்த உயர்தர, அணுகக்கூடிய உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் கோடக் ஸ்டாக் ஷாலா இந்த தேவையை பூர்த்தி செய்கிறது.


இது குறித்து பேசிய கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீபால் ஷா கூறுகையில், “கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில், நிதி அதிகாரமளித்தல் பற்றிய அறிவில் இருந்து தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

இலவச, விரிவான வீடியோ மற்றும் உரை அடிப்படையிலான உள்ள டக்கத்தை கொண்ட எங்கள் புதிய கற்றல் தளமான கோடக் ஸ்டாக் ஷாலாவை அறிமுகப்ப டுத்துவதன் மூலம், அவர்களின் பின்னணி அல்லது அனுபவத்தை பொருட்படுத்தாமல், முதலீட்டு கல்வியை ஒவ்வொரு இந்தியருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுகிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img