fbpx
Homeபிற செய்திகள்ஆவின் பொருட்கள் விற்பனையகங்கள் விரைவில் கிராமப்புறங்களில் திறக்கப்படும்: கோவை ரத்தினம் கல்லூரி விழாவில் அமைச்சர் மனோ...

ஆவின் பொருட்கள் விற்பனையகங்கள் விரைவில் கிராமப்புறங்களில் திறக்கப்படும்: கோவை ரத்தினம் கல்லூரி விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்வில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற் பத்தியாளர்களுக்கு கால் நடைகள் வாங்குவதற்கு கடன் வழங்குவது என்ற செயல் திட்டத்தையும் மாநிலத்தில் இருக்கக்கூடிய அனைத்து பால் உற்பத் தியாளர்கள் மற்றும் 9120 கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயங்குகின்ற சங்கங்களாக மாற்றக்கூடிய செயல் திட்டத்தை வடி வமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயிரத்திற்கும் மேற் பட்ட புதிய பால் உற்பத்தியாளர்கள் சங் கத்தை இந்த நான்கு ஆண்டுகளில் துவக்கி இருப்பதாகவும் இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படக்கூடிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செயல்படாத சங்கங்கள், லாபம் ஈட்டாக சங்கங்களை மேம்படுத்த எம்பிஏ மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து “மிஷின் ஒயிட் வேவ்” திட்டத்தின் மூலம் மேம்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தில் அந்த மாணவர்கள் மூன்று மாத காலம் சங்கங்க ளுடன் இணைந்து பய ணிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் வெற்றிபெறும் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும் லாபத்துடன் இயங்கும் என தெரிவித்த அவர் இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளின் சேவையும் அதிகரிக்கும் ஆவின் பொருட்கள் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் கிராமப் புறங்களில் ஆவின் பொருட்கள் விற்பனைய கங்களை தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மாநில அளவில் பாலின் தரமும் உயர்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆவினில் பல்வேறு புதிய பொருட்கள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ரத்தினம் கல்லூரியின் தாளாளர் மதனகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img