திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் தலைமை ஆசிரியர் திரு. சுந்தரராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் சரவணகுமார், சரவணன், செலின் ராணி, உடற்கல்வி ஆசிரியர்கள்,செல்வி, பாலகிருஷ்ணன், திருப்பூர் அமர்ஜோதி மனவளக் கலை யோகா ஆசிரியர்கள் விஜய சாந்தி, காளீஸ்வரி, சித்ரா, மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் செலின் ராணி வரவேற்றுப் பேசினார். விஜய சாந்தி யோகா பற்றி சிறப்புரை ஆற்றினார். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.



