fbpx
Homeபிற செய்திகள்புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவி

புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவி

கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயம், பங்குத்தந்தையும் புனித வின்சென்ட் தே பவுல் சபையினரும் இணைந்து கல்வி பயிலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதசார்பற்ற முறையில் ரூ.5 லட்சம் கல்வி உதவி தொகையினை வழங்கினர்.

இந்நிகழ்வானது புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புனித அருளானந்தர் ஆலயத்தின் பங்குத் தந்தை ததேயு பால்ராஜ், உதவி பங்குத்தந்தை நவீன் ரோசாரியோ தலைமை ஏற்று மற்றும் புனித வின்சென்டதே பவுல் சபையின் தலைவர் சகோ ராஜேஸ், துணைத் தலைவர் சகோ பிரதாப், செயலர் சகோதரி சுகுணாமேரி, உதவி செயலர் சகோ சகாயமுத்து பொருளாளர் சகோ அருள், முன்னாள் தலைவர் கள் சகோ சாமுவேல், சகோ ரவி ஆல்பிரட் மற்றும் புனித வின்செனட் தே பவுல் சபை உறுப்பினர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கல்வி உதவித்தொகையானது மதசார்பற்ற முறையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர் களுக்கு வழங்கப்பட்டது.

இதில் 20 கல்லூரி மாண வர்களும், 45 பிற பள்ளி மாணவர்களும், ஆர்.எஸ்.புரம் பிஷப் உபகாரப் பள்ளியில் பயி லும் 45 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், பள்ளிச் சீரு டையும் வழங்கப்பட்டது. இதில் 110 மாணவர்கள் பயன் அடைந்துள்ள னர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img