fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா கும்பகோணம் கிளை நவீன வசதிகளுடன் இடமாற்றம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கும்பகோணம் கிளை நவீன வசதிகளுடன் இடமாற்றம்

கும்பகோணம் சாரங்கபாணி கிழக்கு வீதியில் இயங்கிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை, 6வது வார்டு பாத்திமாபுரம் 60 அடி சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதன் திறப்பு விழா இன்று (11ம் தேதி) நடைபெற்றது.

கணக்கு வசதி, பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய இக்கிளையை வங்கியின் கோவை மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அருகில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா திருச்சி பிராந்திய தலைவர் பி.சாரதா தேவி, கிளை மேலாளர் எச்.ஆர்.அம்பிகா, மருத்துவர்கள் பி.என்.கிருஷ்ணகுமார், நாக கீர்த்தனா, பி.நெப்போலியன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img