fbpx
Homeபிற செய்திகள்‘மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் மட்டும் தான்’ கோவை பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி...

‘மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் மட்டும் தான்’ கோவை பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவை வடக்கு மாவட்ட திமுக – ஆர்எஸ் புரம் பகுதி கழகம் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை ஆர்எஸ் புரம் லைட் ஹவுஸ் மைதானத்தில் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்க, பகுதிக்கழக செயலாளர் கார்த்திக் செல்வ ராஜ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: –

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச் சாமி பொய் மட்டுமே பேசி வருகின்றார். எதையெடுத்தாலும் பொய் பேசி அரசியல் செய்ய முயல்கின்றார்.
இந்தியாவிலேயே, மோடியை எதிர்த்து, மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் தான். அனைவருக்கும் வழிகாட்டியாக நமது முதல்வர் அவர்கள் விளங்கி கொண்டிருக்கின்றார்.
பெண்களுக்கான ஆட்சியாக நமது ஆட்சி நடைபெற்று வருகின்றது. அமித்ஷா தமிழகம் வருவதால் பயப்படுவதாக சொல்கின்றனர். பாராளுமன்ற தேர்தலின் போது, மோடி தமிழகத்திற்கு எட்டு முறை வந்தார். ஒன்றும் புடுங்க முடியவில்லை. அமித்ஷா வந்து என்ன பண்ண போகிறார்?


கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்ததை போன்று வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியடைய வேண்டும், அதற்கான மக்கள் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில், மேயர் ரங்கநாயகி, எம்பி ஈஸ்வரசாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள் மொழி, முன்னாள் மாவட்ட செயலாளர் சிஆர்.ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ், டிஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், வட்டச் செயலாளர் ஜெகதீஷ், காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோயில் அறங்கா வலர் குழு தலைவர் பரமசிவன், சி.ஆர். ரவிச்சந்திரன், சி.டி.டி.பாபு, புலவர் பழனிச் சாமி, முருகானந்தம், ஆறுச்சாமி, ஆல்வின், பழக்கடை ஆறுமுகம், கிருபா சபரிநாதன், சுலைமான், நவ்ஷாத், மகேஸ்வரன், நித்திய சங்கர், மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான், ஒன்றிய செயலாளர் சாமிபையன், கூடலூர் நக ராட்சித் தலைவர் அறிவராசு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

விழா முடிவில் பகுதி துணைச் செயலாளர் நாசரே நன்றி கூறினார். இதில் 500க் கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img