சென்னையைச் சேர்ந்த ரேலா மருத்துவமனை இரு பெண் குழந்தைகளின் தாயான கவிதா (44) என்ற நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதன் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற சூழலை அவர் கடந்துவிட்டார்.
அவருக்கு நுரையீரல் சுருக்கப் பிரச்சனை ஏற்பட்டு, நுரையீரல் கெட்டியாகவும் ஆகிவிட்டி ருந்தது. இதன் விளைவாக மூச்சுவிடுதலில் பிரச்சனை இருந்ததுடன் அது அவரது இதயத்தையும் கடு மையாகப் பாதித்திருந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு நுரையீரல்களையும் உறுப்பு மாற்றம் செய்து சிகிச் சையளிப்பது என்பது அறுவை சிகிச்சைத்துறையில் முக்கியமான நிகழ்வாகும். இதனை செய்து முடிக்க 8 மணி நேரம் பிடித்திருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச் சைப்பிரிவின் இயக்குநரும் முதுநிலை மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் ஸ்ரீநாத் விஜயசேகரன், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் மருத்துவர் ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான 30 பேர் கொண்ட மருத்துவக்குழு வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது.
இது குறித்து ரேலா மருத்துவமனையின் தலை வர் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், “பலருக்கும் ‘நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை’ அவர்களது உயிரைக் காக்கும் என்பது தெரிவதில்லை.
இது குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும்“ என்றார்.
நுரையீரல் மாற்றுப் பிரிவின் மருத்துவ தலைவர் மருத்துவர் ஐஸ்வர்யா ராஜ்குமார் கூறுகையில், “இந்நோயாளி 2024ல் ரேலா மருத்துவமனைக்கு வந்தார். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவ ருக்கு 15 லிட்டர் ஆக்சிஜன் தேவையாக இருந்தது. மாற்று நுரையீரல்கள் பொருத் தப்ப டாமல் இருந்தால் சில வாரங்களுக்குமேல் அவ ரால் உயிர் பிழைத் திருக்க முடியாது. இந் நிலையில் அவருக்கு முற்றிலும் பொருந் தக்கூடிய வகை யிலான நுரையீரல் கள் கிடைத்தது நல்ல தருணம்“ என்றார்.
இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவின் இயக்கு னர் மருத்துவர் ஸ்ரீநாத் விஜயசேகரன், “அவரது நெஞ்சப்பகுதிக்குப்பொருத்தமான அளவில் நுரையீரல் களைக்கண்டு பிடித்துப் பெறுவது நாங்கள் சந்தித்த சவால்களுள் முக்கியமானது” என்றார்.



