fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வெற்றி டெக் சொல்யூஷன்ஸ் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு: பிரபல வல்லுநர்களுடன் கலந்துரையாடல்

கோவையில் வெற்றி டெக் சொல்யூஷன்ஸ் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு: பிரபல வல்லுநர்களுடன் கலந்துரையாடல்

நவீன காலத்தில் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெற்றி டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கோவையில் நடத்திய “Zero to Hero in Cybersecurity” எனும் குறுகிய நேர சைபர் பாதுகாப்பு முகாம் பெரும் வரவேற்பை பெற்றது.


கோவை ரேஸ் கோர்ஸில் அமைந்துள்ள கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


50 இடங்களுக்கு மட்டும் துவக்கப்பட்ட இந்த முகாமுக்கான பதிவுகள் மிகச் சில நாட்களிலேயே நிறைவு பெற்றது. இது மாணவர்கள் சைபர் பாதுகாப்பில் காட்டும் ஆர்வத்தை தெளிவாகக் காட்டுகிறது.


தீபிகா ஜெயசேகரன் நிறுவிய வெற்றி டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. காவல் துறை மற்றும் அரசு துறைகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளது.


Bug Bounty, VAPT, Digital Forensics போன்ற துறைகளில் மாணவர்களை இயக்கியுள்ளது. மாணவர்கள் தொழில்முறை சைபர் பாதுகாப்பு பயணத்தை தொடங்க வழிகாட்டி வருகிறது.


தீபிகா, ஒரு Bug Hunter ஆக பல உலக நிறுவனங்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார். NASA, COSTCO, Unilever போன்ற நிறுவனங்களின் Hall of Fame பட்டியலில் இடம்பெற்றுள்ளார். தீபிகா தன் உரையில், “சைபர் பாதுகாப்பு என்பது இன்று யாரும் தவிர்க்க முடியாத ஒரு அறிவு” என வலியுறுத்தினார்.


இந்த முகாமில் பங்கேற்ற மாணவர்கள், தினசரி சந்திக்கும் சைபர் தாக்குதல்களை புரிந்துகொண்டனர். நேரடி Ethical Hacking Demonstration பார்த்தனர்.

 Cyber Security Analyst, Bug Bounty Hunter போன்ற தொழில் வாய்ப்பு வழிகாட்டுதல்களை பெற்றனர். பயிற்சிக்கான இலவச online tools பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டனர். சிறந்த நிபுணர்களிடம் இருந்து நேரடி கேள்வி&பதில்கள் பெற்று பயனடைந்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு மென்படிவ சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தினேஷ் பராந்தகன், மாணவர்களுக்கு career roadmap மற்றும் சரியான சான்றிதழ்கள் குறித்து வழிகாட்டினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேவப்ரதிமா ஆதிமூலம் – Web Application Security மற்றும் DevSecOps-இல் தேர்ந்தவர்.

அதேபோல சிறப்பு விருந்தினரான பிரவின் ஞானசேகரன் – Networking மற்றும் Linux துறையில் சிறந்து விளங்கும் இளம் பாதுகாப்பு நிபுணர். மற்றொரு சிறப்பு விருந்தினரான ரிஷிநாத்வர்மா மாரிமுத்து – தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் P1 பக் கண்டுபிடித்து, நாசாவின் பாராட்டைப் பெற்றவர்.

அதேபோல கார்த்திகேயன் சடையாண்டி – 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுடைய சைபர் பாதுகாப்பு நிபுணர். இவர்கள் எல்லாம் தங்கள் அனுபவத்தை மாணவர்களிடம் பகிர்ந்து உரையாற்றினர்.


இம்முகாமின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றி டெக் சொல்யூஷன்ஸ், பள்ளி மாணவர்களுக்கு தனி பாடநெறி உருவாக்கம், இந்தியா முழுவதும் மாணவர்களை சென்றடைய online version முகாம் போன்றவற்றை தங்கள் எதிர்காலத் திட்டங்கள் என அறிவித்துள்ளது.


முகாமின் நிறைவு உரையில், தீபிகா அனைவருக்கும் நன்றியை தெரிவித்ததுடன், சைபர் பாதுகாப்பு என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கட்டாயமாக கொண்டுவர வேண்டிய திறமை என வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img