fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்: வரும் 28ம் தேதி துவக்கம்

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்: வரும் 28ம் தேதி துவக்கம்

கோவையில் அகில இந்திய கூடைபந்து போட்டிகள் 5 நாட்கள் நடக்க உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக துணைத் தலைவர்கள் நவரத்தன் குமார் பாப்னா, பழனிச்சாமி, செயலாளர் எஸ். பாலாஜி, இணை செயலாளர்கள் பாலா, ராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:


ஆண்டுதோறும் நடத் தப்படும் அகில இந்திய அளவிலான போட்டிகள் இந்தாண்டு வருகிற 28ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடக்கிறது. ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 8 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பை யும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக் டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், சிறப்பாக விளையாடும் வீரருக்கு சிறந்த விளை யாட்டு வீரர் என்ற விருதும் வழங்கப்படும்.


பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண் டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ. 20 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், மேலும் இத்தொடரில் சிறப் பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

மே 28ம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் மே 30 வரை சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் மோதும் போட்டிகள் 31ம் தேதி நடைபெறும் அரை யிறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

மேலும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 1ம் தேதி மாலை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடு வார்கள். இந்த போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி உள் விளை யாட்டு அரங்கத்தில் தின மும் மாலை 4.00 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும். இப்போட்டிக்கு பார்வை யாளர்களுக்கு அனுமதி இலவசம்.


வரும் மே 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்கும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர், கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார்.

மேலும் கௌரவ விருந்தினராக சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img