அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையும், புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜயும் இணைந்து, உட்புற மூல நோய்க்கான புதிய, குறைந்தபட்ச அறுவை சிகிச்சையான ‘ரஃபேலோ’ ரேடியோ அலை சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சென்னை அப் பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்து வமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் வாணி விஜய் மற்றும் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு கூட்டாளர் வலையமைப்பின் தலைவரான ருபிந்தர் கவுர் ஆகியோர் இந்த சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்தனர்.
இதன் அறிமுக நிகழ்ச்சியில் நடிகை பார்வதி நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்தியாவில் சுமார் 40 மில்லியன் பேர் மூலநோயால் பாதிக்கப்படுகின்றனர்;
இந்நோய் பெரும் பாலும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களிடம் காணப்படுகிறது. அறுவை சிகிச்சை அச்சம் காரணமாக பலர் சிகிச்சையைத் தவிர்க்கும் சூழலில், ரஃபேலோ செயல்முறை ரேடியோ அலை அகற்றலை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச அறுவை சிகிச்சையைக் கொடுக்கிறது.
இப்புதிய ரஃபேலோ சிகிச்சை சுமார் 15-20 நிமிடங்களில் முடிவடைகிறது.
சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவ மனையின் GI – குறைந்த பட்ச மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் வாணி விஜய், கூறுகையில்,
“புரோக்டாலஜியில் இது ஒரு பெரிய மாற்றமாகும், ஏனெனில் இது நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் நிவாரணம் வழங்கும் சிகிச்சையாக விளங்குகிறது” என்றார்.



