உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ வரும் 26ம் தேதி இந்தியாவில் அதன் புதிய நியோ 10 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
இந்த பிரிவில் இந்தியாவின் வேகமான ஸ்மார்ட்போனான இதில் இரட்டை சிப் உடன் முதன்மை நிலை செயல்திறன், புதுமை மற்றும் வேகத்தை வழங்குகிறது.
இதன் ஸ்னா ப்டிராகன் 8எஸ் ஜெனரஷேன் 4 செயலியானது முதன்மை தர வேகத்தையும் செயல்திறனையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஐக்யூஓஓ தனியுரிம சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் க்யூ1 உடன் இணைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், 2.42 மில்லியனுக்கும் அதிகமான AnTuTu பெஞ்ச்மார்க் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.
இது அதன் பிரிவில் பயனர் களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 144 எப்பிஎஸ் கேமிங் அம்சத்துடன் மிகப் பெரிய 7000 எம்எம்2 வேப்பர் கூலிங் சேம்பரும் உள்ளது.
மிக மெல்லிய தோற்றத்தில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்கான 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் தடிமனைப் பொறுத்தவரை வெறும் 0.809 செ.மீ.ஆக உள்ளது. இதில் உள்ள 120 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் ஸ்மார் ட்போனை வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
அற்புதமான பயனர் அனு பவத்தை வழங்கும் விதமாக இதில் 5500 நிட்ஸ் உச்ச திரை பிரகாசத்துடன் இந்த பிரிவின் பிரகாசமான 1.5K 144Hz அமோல் டிஸ்ப்ளே உள்ளது.
இந்த நியோ 10 ஸ்மார்ட் போனில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 ஓஐஎஸ் கேமரா, 8எம்பி அல்ட்ராவைட் மற்றும் 32 எம்பி முன்புற கேமரா மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் 4கே வீடியோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
இன்பெர்னோ ரெட் மற்றும் டைட்டானியம் குரோம் ஆகிய இரு வண்ணங்களில் நியோ 10 அறி முகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



