எம்என்கே ஹலோ டிஜிட்டல் மல்டி டிரேடர்ஸ் அமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் கல்வித் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி அமைப்பின் நிறுவனர் மனிஷ் குமார் பெனியா, இணை நிறுவனர் சந்தீப், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் செல்வராஜ், மாநில தொழில்நுட்பத் தலைவர் டாக்டர் குகனேந்திரன் மற்றும் மாநில செயல்பாட்டுத் தலைவர் டாக்டர் புதிய செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. புதுமையான விழிப்புணர்வு – ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் நலன், தன் னம்பிக்கை மற்றும் அவர்களுக்கு ஊக்கம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்தவர்கள் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதை மேம்படுத்துவ திலும், மாணவர்களின் திறனை வளர்ப்பது குறித்தும் பேசினர்.
டிஜிட்டல் கல்வி முறையில் முன்னோடியாக மாறுவதற்கு தமிழ்நாடு மகத்தான ஆற்ற லைக் கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு திட்டங் களை ஏற்றுக்கொள்வதன் மூலம், கல்வி முறையை மாணவருக்கு நெருக் கமாகக் கொண்டுவருவதை யும், டிஜிட்டல் யுகத்தில் வளர்ச்சிக்கு தேவையான கருவிக ளைக் கொண்டு ஒவ்வொரு மாணவருக்கும் அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் கள் தெரிவித்தனர்.



