fbpx
Homeபிற செய்திகள்ஜெ.எஸ்.டபுள்யு. எம்.ஜி மோட்டார் இந்தியாவின் இ-20 ஹெக்டர் காருக்கு ரூ.4 லட்சம் சலுகை

ஜெ.எஸ்.டபுள்யு. எம்.ஜி மோட்டார் இந்தியாவின் இ-20 ஹெக்டர் காருக்கு ரூ.4 லட்சம் சலுகை

இந்தியாவின் முதல் இணைய காரான ஹெக்டர், இப்போது இ-20 எரிபொருள் பெட்ரோலுக்கு சான்றிதழ் பெற்றுள்ளதாக ஜெ.எஸ்.டபுள்யு. எம்.ஜி மோட்டார் இந்தியா அறிவித்துள்ளது.


இ20 மெட்டீரியல் இணக்கமான ஹெக்டர் 1.5 லி பெட்ரோல் எம்.டி மற்றும் சி.வி.டி வகைகளில் கிடைக்கும்.


இந்த நடவடிக்கை ஏப்ரல் 1, 2025க்கு பிறகு தயாரிக்கப்படும்
பெட்ரோல் எரிபொருள் வாகனங்களில் இ20 இணக்கத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஆணையுடன் ஒத்துப்போகிறது.


எம்.ஜி ஆஸ்டர் கடந்த ஆண்டு முதல் இ20 இணக்கமாக உள்ளது. பசுமையான வாகன எதிர்காலத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்போம் என்று எம்.ஜி மோட்டார் இந்தியாவின் விற்பனைத் தலைவர் ராகேஷ் சென் கூறினார்.


கார் வாங்கும் அனுபவத்தை வசதியுடன் மறுவரையறை செய்ய, ஜெ.எஸ்.டபுள்யு. எம்.ஜி மோட்டார் இந்தியா சமீபத்தில் அதன் முதன்மை எஸ்.யு.வி எம்.ஜி ஹெக்டருக்காக ‘ மிட்நைட் கார்னிவல்’ ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த பிரத்யேக பிரச்சாரம் கார் வாங்குபவர்களை எம்.ஜி-யை பார்வையிட அழைக்கிறது.


மேலும் கார் வாங்குபவர்கள் லண்டனுக்கு ஒரு கனவுப் பயணத்தை வெல்வார்கள். அத்துடன் ரூ. 4 லட்சம் வரை மதிப்புள்ள பிரத்யேக சலுகைகளையும் பெறுவார்கள். எம்.ஜி ஹெக்டர் ரூ.13.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கவர்ச்சிகரமான விலையில் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img