அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் கோவை வளாகத்தில் எட்டு நாள் கலாச்சார முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள அம்ருத வித்யாலயங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
“தினசரி வாழ்க்கைக்கான கீதை” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த முகாம், பகவத் கீதையின் காலத்தால் அழியாத உபதேசங்களை அன்றாட வாழ்வில் நடைமுறையில் கொண்டு வருவதற்கு முக்கிய கவனம் செலுத்தியது.
மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொதுச்செயலாளர் சுவாமி பூர்ணாம்ருதானந்தபுரி இந் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இந்த முகாம் கீதை, யோகா மற் றும் அன்றாட வாழ்க்கையில் நடை முறை பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக் கியது.
மேலும் இம்முகாமில் கோழிக் கோடு அத்வைத ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி சிதானந்தபூரி, சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி மித்ரானந்தா, மாதா அமிர்தானந்தமயி மடத் தைச் சேர்ந்த சுவாமி அஜாம் ருதானந்தபுரி, அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் குருஞானம்பிகை மற்றும் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பேச்சா ளர்கள் தலைமை தாங்கினர். இதில் பலர் பங்கேற்றனர்.



