மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை யூகோ வங்கியின் நிர்வாக இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான அஸ்வனி குமார் வெளியிட்டுள்ளார். இந்த அறிக் கையில் அவர் கூறிய தாவது: இந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.652 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.526 கோடியாக இருந்ததை விட 23.98% அதிகமாகும்.
மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டிற் கான ரூ.1,654 கோடியுடன் ஒப்பிடும்போது, மார்ச் 2025 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிகர லாபம் ரூ.2,445 கோடி யாக உயர்ந்தது. இது ஆண் டுக்கு ஆண்டு 47.80% வளர்ச்சியைக் குறிக்கிறது.
மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ.1699 கோடியாக இருந்தது, இது 33.48% ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகும். இது 2024 நான்காம் காலாண்டில் ரூ.1273 கோடியாக இருந் தது. அதனுடன் ஒப்பி டும்போது, நிகர வட்டி வருமானம் (NII) ரூ. 2,187 கோடியாக இருந்தபோது, 2025 நான்காம் காலாண் டிற்கான அதன் நிகர வட்டி வருமானம் ரூ.2,698 கோடியாக இருந்தது, இது 23.35% ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பைக் குறிக்கிறது.
நிகர வட்டி வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 18.88% அதிகரித்து மார்ச் 2025 இல் முடிவடைந்த ஆண் டிற்கான வருவாய் ரூ.9,630 கோடியாகும். இது மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டில் ரூ.8,101 கோடி யாக இருந்தது.
மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டிற் கான 2.92% உடன் ஒப் பிடும்போது, மார்ச் 2025 இல் முடிவடைந்த ஆண் டிற்கான வங்கியின் NIM 3.08% ஆகும். யூகோ வங்கியின் ஒரு பங்கின் வருவாய் மார்ச் 31, 2025 அன்று ரூ.2.04 ஆக அதிகரித்தது, இது 2024 இல் இதே காலகட்டத்தில் ரூ.1.38 ஆக இருந்தது.
யூகோ வங்கியின் மொத்த வணிக வளர்ச்சி மார்ச் 31, 2025 நிலவரப் படி ரூ. 5,13,527 கோடி யாக அதாவது 14.12% அதிகரித்தது. மார்ச் 31, 2024 நிலவரப்படி இது ரூ.4,50,007 கோடியாக இருந்தது. அதன் மொத்த முன்பணங்கள் ஆண்டுக்கு ஆண்டு 17.72% அதிகரித்து ரூ. 1,86,877 கோடியிலிருந்து ரூ.2,19,985 கோடியாக அதிகரித்துள்ளது. அதன் மொத்த வைப்புத்தொகை கள் ஆண்டுக்கு ஆண்டு 11.56% அதிகரித்து மார்ச் 31, 2025 நிலவரப்படி ரூ.2,93,542 கோடியாக உள்ளது. மார்ச் 31, 2024 நிலவரப்படி 2,63,130 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPA) மார்ச் 31, 2025 நிலவரப்படி 2.69 சதவீத மாக குறைந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.46% ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 77 அடிப்படைப் புள்ளி முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நிகர செயல் படாத சொத்துக்கள் மார்ச் 31, 2024 நிலவ ரப்படி 0.89% ஆக இருந்து மார்ச் 31, 2025 நிலவரப்படி 0.50% ஆக மேம்பட்டுள்ளது, இது 39 அடிப்படைப் புள்ளி ஆண்டுக்கு ஆண்டு வளர் ச்சியைக் குறிக்கிறது.மேலும் யூகோ வங்கி 25 நிதி யாண்டிற்கான 3.90% ஈவுத்தொகையை அல்லது ஒரு பங்குக்கு 39 பைசாவை முன்மொழிந் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்ச் 31, 2025 நிலவரப் படி, வங்கியானது 3302 உள்நாட்டு கிளைகள், சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங்கில் இரண்டு சர்வ தேச கிளைகள் மற்றும் ஈரானில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை கொண்டு இயங்கி வருகிறது.
வங்கியின் கிளைகளில் 2031 (61%) கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள் ளன. மார்ச் 31, 2025 நிலவரப்படி வங்கி 2522 ஏடிஎம்களுடன் செயல்படு கிறது.



