ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் சேதம டைந்த வாழைப் பயிருக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தகுமார், வேளாண் இணை இயக்குநர் எம்.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கை விவரம்: கீழ்பவானி வாய்க்காலில் மொத்தம் 6 நனைப்புக்கு தண் ணீர் விட வேண்டும். ஆனால், 5 நனைப்புக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. வெயில் அதிகம் உள்ளதாலும் இன்னும் அறுவடைக்கு நாள் கள் உள்ளதாலும் 6-ஆம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க வேண்டும். தென்னையை வெள்ளை சுருள் ஈ தாக்கு வதால் 3-இல் ஒரு பங்காக தேங்காய் விளைச்சல் குறைந் துள்ளது. தேங்காய், இளநீர், தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயரும். அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் வலது கரை பாசன வாய்க்காலில் தண் ணீர் நிறுத்தியதும் தூர்வாரி மண், கொடிகளை அகற்ற வேண்டும். மானாவாரி இரவைப்பயிருக்கு புதிய கடலை ரகங்களை வழங்க வேண்டும். கீழ்பவானியில் 5-ஆவது நனைப்புக்கு வழங்கிய தண்ணீரே பயன்படுத்தாமல் வீணாக உபரியாக காவிரியில் கலக்கிறது.
சக்தி சர்க்கரை ஆலை எரிசாராய கழிவை லாரிக ளில் கொண்டு வந்து விவ சாய நிலங்கள், நீர்நிலை ஓரங்களில் ஊற்றுவதால் நிலத்தடி நீர், கிணற்று நீர், நீர்நிலைகள் பாதிக்கின்றன. இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை நீர்நிலைகள், வயல்கள், பொதுப் போக்கு வரத்து பாதைகளில் கொட்டு வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நெல் கொள்முதல் நிலை யங்களில் விடுமுறையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.



