fbpx
Homeபிற செய்திகள்சாயர்புரம் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் உரிமை மன்றம் துவக்கவிழா

சாயர்புரம் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் உரிமை மன்றம் துவக்கவிழா

தூத்துக்குடி, சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் உரிமை மன்ற துவக்க விழா நேற்று நடைபெற்றது. சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறையும் இணைந்து 7வது குழந்தைகள் உரிமை மன்ற துவக்க விழாவினை டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் நடத்தினர்.

கல்வியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே.உமாசித்ரா வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு இளைஞர் நீதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்,குழந்தை உதவி எண் 1098,போக்சோ சட்டம், குழந்தை திருமணம், மற்றும் போதை பொருள் இல்லா தமிழ்நாடு பற்றி உரையாற்றினார்.

குழந்தைகள் நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளின் உரிமை மற்றும் நலன்களின் முக்கியத்துவத்தையும் அதனை செயல்படுத்தும் வழிமுறைகளையும் குறித்து சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளுக்கு குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் அனிதா ரூத் மங்கள செல்வி நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியை டாக்டர்.க.பிரிஸ்கில்லா நன்றி கூறினார்

படிக்க வேண்டும்

spot_img