அரசுப் பதவிகளில் எதிர் காலத்தில் ஆண்களை விட பெண்களின் விகிதாசாரம் அதிக ரிக்கும் காலம் வரக்கூடும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தின விழா வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பெண்களுக்கு கடின உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முன்னேற முடியும்.
மாணவிகள் தாங்கள் எண்ணியதை படிக்கவும், அதேசமயம் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் போக்ஸோ சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர்.
ஆண்களும், பெண்களும் சமம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். முன்பு அனைத்துப் பணிகளிலும் ஆண்களை விட பெண்களின் விகிதாசாரம் மிக வும் குறைந்திருந்தது. அந்த நிலை மாறிவருகிறது.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட 13 நீதிபதிகள் பெண்களாக உள்ளனர். வருங்காலத்தில் ஆண்களில் விகிதாசாரம் குறைந்து சென்னையின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. ஆணும், பெண்ணும் ஒற்றுமையுடன் குடும்பத்தை நடத்தினால்தான் குடும்பம் மகிழ்ச் சியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி வேந்தர் கோ.விசுவ நாதன் தலைமை வகித்து பேசிய தாவது:உலகளவில் இலங்கையில் தான் முதன்முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்ற பெண் பிரதமராக இருந்தார்.
இரண்டாவதாக இந்தியாவில் இந்திரா காந்தியும், மூன்றாவதாக இஸ்ரேலில் கோல்டா மேயர் ஆகிய பெண்கள் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். இந்திரா காந்தியும், ஜெயலலிதாவும் அரசியல் ஆளுமைகளாக திகழ்ந் துள்ளனர். எனினும், இன்றளவில் பெண்கள் அதிகாரத்துக்கு வருவது சவாலாக இருந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் கூட இன்றளவும் பெண்களுக்கு சம வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இந்திய நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 25 ஆண்டுகளுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதா இத்தனை ஆண்டுகளை கடந்து 2023-இல்தான் நிறைவேற்றப்பட்டது.
எனினும், அந்த சட்டம் இன் றளவும் நடை முறைக்கு வரவில்லை. பெண்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. 47 சதவீதம் அளவுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது.
இதில், மூன்றில் 2 பங்கு பெண்கள் 19 வயதுக்கு கீழாக தாய்மைப் பேறு அடைந் தவர்களாக உள்ளனர். இதிலிருந்து மாற்றம் கொண்டுவர கல்வியால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பெங்களூர் தொழிலதிபர் வந்தனா ஜெயின் கௌரவ விருந்தினராக பங்கேற்று பேசினார். விழாவில், பெண்கள் கார் பந்தய அணியின் பயிலரங்க தொடக்கம் குறித்து அறிவிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
இதில், விஐடி துணைத்தலைவர் கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன்,செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, துணை வேந்தர் காஞ்சனாபாஸ்கரன், இணைதுணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் நல உதவிய இயக்குநர் வரலட்சுமி நன்றி கூறினார்.



