சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சென்னையைச் சேர்ந்த கிரேட் லேக்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனம் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
2023-2024ல் 89 மில்லியனுக்கும் அதிகமான நகர்ப்புறங்களைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் இன்னும் தொழிலாளர் சந் தைக்கு வெளியே வேலை வாய்ப்பின்றி இன்னும் இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
2017-18 முதல் 2023-2024 வரை 6 ஆண்டுகள் காலஅளவில் நகர்ப்புற இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு 10% உயர்ந்திருந்த போதிலும் கூட இந்த நிலை காணப்படுகிறது.
நகர்ப்புற இந் தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக இருக்கும் அவல நிலையை இந்த அறிக்கை முன்னிலைப்படுத்துகிறது.
சென்னை, கிரேட் லேக்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் டீன் சுரேஷ் ராமநாதன் பேசுகையில், ”தரமான பணி உருவாக்கம், ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தவருக்கும் வாய்ப் பளிக்கும் அளவிற்கு துரித மாக இல்லை எனில், பன்முகத்தன்மை பாதிக்கப்படும் இடர்வாய்ப்பை இது உருவாக்கும்“ என்றார்.
உயர் கல்வி கற்ற நபர்களது வீடுகளிலும் கூட, பாலின இடைவெளிகள் தொடர்ந்து நீடிக் கின்றன என்பது, இந்த அறிக்கையின் கண்டறிதல் முடிவுகளில் முன்னிலைப்படுத்தப் பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான அம்சமாகும்.
கிரேட் லேக்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பொருளா தாரவியல் பேராசிரியரும், இயக்குனருமான வித்யா மஹாம்பேர் கூறுகையில், “நகர்ப்புற இந்தியாவில் பெண் பணியாளர்களது பங்கேற்பு அதிகரித்து வரு கின்ற நிலையில், வருவாய், கரியர் வளர்ச்சி மற்றும் குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றில் உண்மை யான பாலின சமத்துவ நிலையில் இன்னும் எட்டவில்லை என்பதே உண்மை” என்றார்.



