fbpx
Homeபிற செய்திகள்விஐடி போபாலின் ‘அட்விஐடியா 2025’ போட்டிகள்

விஐடி போபாலின் ‘அட்விஐடியா 2025’ போட்டிகள்

விஐடி போபாலில் ‘அட்விஐடியா 2025’ ஆண்டு கலாச்சார மற்றும் தொழில்நுட்ப பேலஸில் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், 53 தொழில்நுட்பம் மற்றும் 59 தொழில்நுட்பம் அல்லாத போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், விரிட்சுவல் ஷோ கேஸ்சஸ் மற்றும் மூச்சடைக்கக்கூடிய நிகழ்ச்சிகள் உட்பட 131 பரபரப்பான நிகழ்வுகள் நடந்தது.

தொடக்க நாளில் பாரா ஜூடோ வீரரும், அர்ஜுனா விருது பெற்றவ ருமான கபில் பர்மர் உற்சாக உரையுடன் விழா தொடங்கப்பட்டது. இதில், விஐடி உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன், விஐடி போ பாலின் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் சிறப்புரையாற்றினர்.

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் ஆகியோர் மாணவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
2வது நாளில் தொழில்நுட்ப சவால்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டிகளில் மாணவர் கள் பங்கேற்றனர். வளா கத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டு தங்களின் திற மைகளை வெளிப்படுத்தினர்.

இறுதிநாளில் பத்மஸ்ரீ, அர்ஜுன் விருதுகள் போன்றவற்றை வழங்கி கவுரவிக்கும் வகையில் எம்பி கவுரவ் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சுனிதி சவுகான் இசை நிகழ்ச்சியுடன் விஐடி போபாலின் ‘அட்விஐடியா 2025’ நிறைவு பெற்றது.

விழா ஏற்பாடுகளை யோகேஷ் சுக்லா (கன்வீனர்), புஷ்ப்தந்த் ஜெயின் மற்றும் சவுரவ் பிரசாத் (கோ கன்வீனர்) ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img