fbpx
Homeபிற செய்திகள்70 ரோபோக்களை வைத்து கேபிஆர் கல்லூரி உலக சாதனை

70 ரோபோக்களை வைத்து கேபிஆர் கல்லூரி உலக சாதனை

கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் தரவுப் பகுப்பாய்வுத் துறை ஷ்வச் பாரத் அபியான் திட் டத்தின் ஒரு பகுதியாக 70 ரோபோக்களைக் கொண்டு 1150 சதுர அடிப் பரப்பளவை 25 நிமிடத்தில் தூய்மையாக்கி உலக சாதனை நிகழ்வை நடத்தியது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிஆர்டிஓ வளர்ச்சி மேம்பாட்டுப் பிரிவின் மின்னணுவியல் மற்றும் ரேடார் பிரிவின் ‘ஜி’ பிரிவு திட்ட இயக்குநர் விஞ்ஞானி எஸ்.நந்தகுமார் கூறுகையில்,
“தரவுப் பகுப்பாய்வுத் துறை இன்றைய தொழில் நுட்ப உலகில் பல சவால் களை எதிர்கொண்டுள்ளது.

அதில் ஒன்று மிகு விரைவாகக் கணக்கிட்டுக் கூறுவதாகும். இன்று ரோபோக்கள், மனித ரோபோக்களாய்ப் பரிண மித்துவிட்டன. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் ரோபோக்கள் வளர்ச்சி பெற்றுவிட்டன.

மாணவர்களாகிய நீங்கள் இந்தப் பயிற்சியில் திறன் பெற்றுவிட்டால் எதிர் காலத்தில் சாதிக்க முடியும்‘ என்று கூறினார். இந்தியா மற்றும் ஆசியா புக்ஸ் ஆப் ரெக்காட்ஸின் நடுவர் கவிதா என் ஜெய்ன் கலந்துகொண்டு இச்சாதனை நிகழ்வைப் பதிவு செய்து அதற்கான சான்றிதழைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.

இதில் கேபிஆர் கல் விக்குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் பி.கீதா, புலத்தலைவர் ஷர்மிளா, துறைத்தலைவர் சத்தி யவதி, பேராசிரியர்கள் ஜெயந்திவாகினி, மனோஜ், ரமேஷ்குமார், பிருந்தா ஆகியோரும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img