2012 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் தங்களை தி.மு.க.வின் 2016 மற்றும் 2021 தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க, தமிழ்நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை நேற்று தர்மபுரியில் தொடங்கி உள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி ஒருங்கிணைப்பா ளர்கள் சாந்தி, ரம்யா ஆகியோர் கோரிக் கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். இந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராள மான பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



